ஹைதராபாத்: பிரகாஷ் ராஜ் இயக்கிய 'தோனி' படத்தில் நடித்த ஆகாஷ் பூரி நடித்துவரும் ரொமாண்டிக் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் மகன் ஆகாஷ் பூரி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ரெமாண்டிக். இந்தப் படத்தில் கீத்திகா ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார்.
இதையடுத்து மேலாடையின்றி கதாநாயகியை கட்டிப்பிடித்தவாறு இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை படக்குழுவினர்கள் சூடேற்றினர்.
இந்த நிலையில், ரெமாண்டிக் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாடல் காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த செட்டில் தொங்கவிடப்பட்ட துணியில் தீ பற்றி எரிய, பின்னர் அடுத்தடுத்த பகுதிகளுக்கு தீ பரவத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து படக்குழுவினர் உடனடியாக விரைந்து அங்கிருந்த மற்ற பொருள்களை அப்புறப்படுத்தினர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், பெரும் பொருட்செலவில் வடிவமைக்கப்பட்ட செட் சில பகுதிகள் தப்பியது.
மேலும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.