மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஸ்வத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில் எஃப்.ஐ.ஆர் படத்தின் ட்ரெய்லர் நேற்று (பிப்.4) சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், 1 மில்லியன் (10 லட்சம்) பார்வையாளர்களைக் கடந்து யூ - டியூபில் சாதனை படைத்துள்ளது.
இத்திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க: நடிகை, எம்.பி. ஜெயா பச்சனுக்கு கோவிட் பாதிப்பு