பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'அவதார் 2' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் அதன் இயக்குநர் ஜேமஸ் கேமரூன்.
பன்டோரா என்ற உலகத்தில் வாழ்பவர்கள், மனிதர்களிடமிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள போராடும் விதமாக அமைந்திருந்த 'அவதார்' படத்தின் முன்னோடியாக அதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அமைந்திருந்தன. பன்டோரா உலகம், அங்கும் வாழும் மனிதர்கள், அவர்களின் குணாதிசயங்கள் என்று படம் ரசிகர்களிடத்தில் பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அதன் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து 'அவதார் 2' படப்பிடிப்பு சத்தமில்லாமல் நடைபெற்று வரும் நிலையில், இந்த பாகத்தில் காட்டப்படவிருக்கும் புதுமையான உலகத்தின் முதல் பார்வையை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்டார்.
அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு சாதன கண்காட்சியின்போது 'அவதார் 2' உலகத்தின் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பென்ஸ் வகை கார்களை தயாரிக்கும் டயிம்லெர் நிறுவனம், 'அவதார்' படத்தின் காட்டப்படும் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு அதைப் போன்று புதுவித அனுபவத்தை தரும் கார்களை உருவாக்கியுள்ளது.
இது பற்றி விளக்கம் அளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கேம்ரூன், இந்த காரின் கட்டுப்பாட்டு பகுதியில் அமர்ந்தேன். அது உயிருடன் இருந்து சுவாசிப்பது போல் உணர்ந்தேன். இயற்கையான சூழலை அது உருவாக்கியது என்றார்.
2021ஆம் ஆண்டு டிசம்பரில் 'அவதார் 2' படம் திரைக்குவரவுள்ளது.