ETV Bharat / sitara

ரஜினி பிறந்தநாளை 70 நாட்கள் கொண்டாடும் ரசிகர் படை - நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, ரசிகர்கள் 70 நாட்கள் தொடர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Rajinikanth
Rajinikanth
author img

By

Published : Dec 7, 2019, 8:26 AM IST

நடிகர் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி தனது 70ஆம் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதையொட்டி, ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி நட்சத்திரப்படி தனது இல்லத்தில் பூஜை செய்து வழிபாடு செய்தார்.

இந்த நிலையில், ரஜினியின் ரசிகர்கள் அவர் மென்மேலும் பல படங்களில் நடிக்கவும், உடல்நலத்தோடு வாழவும் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். 70 நாட்கள் தொடர்ந்து ரஜினி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாள்தோறும் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rajinikanth
ரஜினி இல்லத்தில் நடைபெற்ற பூஜையின் போது எடுக்கப்பட்ட படம்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய ரசிகர்கள் ரஜினி நலமுடன் வாழவேண்டி அர்ச்சனை செய்தனர். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு, உணவு, இனிப்புகள், ரஜினி படங்கள், பரிசுப்பொருட்களை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து பேசிய ரஜினி மக்கள் மன்ற தென் சென்னை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், 'அடுத்த ஆண்டு நிச்சயம் தலைவர் கட்சி தொடங்கிவிடுவார். 2021ல் தமிழ்நாடு முதலமைச்சராக அவர் பதவியேற்கவேண்டும் என்பதே தங்களது ஆசை. கமல்ஹாசனுடன் இணைந்து தலைவர் பணியாற்றச் சொன்னாலும் நாங்கள் கேட்டு நடப்போம்' என தெரிவித்தார்.

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தர்பார் திரைப்படம் வரும் பொங்கலுக்குத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

கண்ணீர் விட்டு அழுத 'குண்டு' பட இயக்குநரின் மனைவி

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/fans-continue-70-days-celebrations-ahead-of-rajinikanth-bday/na20191206184948084

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.