ETV Bharat / sitara

காட்டு கத்து கத்துறோமே யாருக்கும் புரியலையா - சின்மயிக்கு ஆதரவாக லக்‌ஷ்மி பிரியா - சின்மயிடம் தவறாக நடந்து கொண்ட ரசிகர்கள்

சமூக வலைதள பக்கத்தில் பாடகி சின்மயியை ரசிகர் ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியது குறித்து நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சின்மயி
சின்மயி
author img

By

Published : Jun 17, 2020, 3:50 PM IST

பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதனையடுத்து தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து 'கலாசாரம்' என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர், உங்களது பின்னணி குரல் மிகவும் அருமையாக உள்ளது. அக்கா எனக்கு பதில் அளிக்கவும் என கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு சின்மயி பதில் அளிக்காமல் இருந்ததால், தகாத வார்த்தையால் திட்டியிருக்கிறார்.

சின்மயி பதிவிட்ட ட்வீட்டில் சிலர் சின்மயிக்கு அறிவுரை வழங்கத் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்ட நடிகை லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி, சின்மயி ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, இதில் அளிக்கப்பட்டிருக்கும் பதில்களை பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைகிறேன். சின்மயி அந்த ரசிகருக்கு முதலில் பதிலளிக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர். அவர் பதிலளிக்கலனா நீங்க என்ன வேணாலும் பேசுவீங்களா... இத்தனை நாளாக காட்டு கத்து கத்துறோமே யாருக்கும் புரியலையா... எப்படி இதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.