ETV Bharat / sitara

மருத்துவர் இயக்கி நடித்துள்ள க்ரைம் திரில்லர் 'எதிர் வினையாற்று'

மருத்துவ நிபுணரான அலெக்ஸ் என்பவர் தானே இயக்கி, நடித்து, தயாரித்துள்ள எதிர் வினையாற்று திரைப்படம் 24 மணி நேரத்தில் நடக்கும் க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

Ethirvinaiyatru
author img

By

Published : Oct 18, 2019, 8:58 AM IST

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக க்ரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ’எதிர் வினையாற்று’ படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் அலெக்ஸ், இளமைதாஸ் என்பவருடன் இணைந்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியும் உள்ளார்.

மருத்துவ நிபுணரான அலெக்ஸ் இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் நாயகியாக சனம் ஷெட்டி நடித்திருக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷெரீப் இசையமைத்திருக்கிறார்.

Ethirvinaiyatru
’எதிர் வினையாற்று’ படத்தில் அலெக்ஸ், சனம் ஷெட்டி

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராஃபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனைப் பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன், மிகவும் அசாதாரண சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள், 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Intro:24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’Body:தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் எதிர்வினையாற்று
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Conclusion:இசை - ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது)
ஒளிப்பதிவு - மனோஜ் நாராயணன்
படத்தொகுப்பு - சந்திர சேகரன்
கலை - பாலா ஓம் பிரகாஷ்
தயாரிப்பு - தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் - அலெக்ஸ், இளமைதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.