சென்னை: இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ். கார்த்தி நடித்துள்ள திரைப்படம் 'என்னங்க சார் உங்க சட்டம்'. இப்படத்தை சதன், ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பீச்சாங்கையில் பரிச்சயம்
![என்னங்க சார் உங்க சட்டம், ennaga sir unga sattam, ennaga sir unga sattam first look, ennaga sir unga sattam second look](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12801785_mov.jpg)
ஆர்.எஸ். கார்த்தி 'பீச்சாங்கை' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. குண. பாலசுப்பிரமணியன் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஆக. 16) வெளியிட்டார்.
![என்னங்க சார் உங்க சட்டம், ennaga sir unga sattam, ennaga sir unga sattam first look, ennaga sir unga sattam second look](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12801785_mov1.jpg)
அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உதயநிதி இனிமேல் 'மக்கள் அன்பன்' - சீனு ராமசாமி