ETV Bharat / sitara

இயக்குநர் சரவண சக்தி மீது சிங்காரவேலன் கதை திருட்டு குற்றசாட்டு! - enga kulasamy story theft

தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றம் சுமத்தியுள்ளார்.

இயக்குநர் சரவண சக்தி
இயக்குநர் சரவண சக்தி
author img

By

Published : Mar 29, 2021, 12:37 PM IST

இது சம்பந்தமாக அவர் அளித்துள்ள அறிக்கையில், "கரோனா ஊரடங்கின்போது என்னை தொடர்புகொண்ட சரவண சக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பண உதவி செய்யுமாறு கேட்டார். அதனால் நான் ஒரு கதை சொல்கிறேன் அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள், அதற்காக 50, 000 ரூபாய் சம்பளம் தருவதாக கூறினேன். அதற்கு சரவண சக்தி சம்மதித்தார்.
எல்லாம் அவன் செயல், பைரவா படங்களின் பாணியில் மருத்துவக் கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், தாளாளர் இருவரும் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுவிடுகிறார்கள். அந்த பெண்ணின் அண்ணன்தான் நாயகன்.
ஆக்க்ஷன் அடிதடி என்று இல்லாமல் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கொலைசெய்து பழி வாங்குகிறான். சட்டத்தாலும், நீதியாலும் அவனை நெருங்ககூட முடியாது என்ற ஒருவரி கதை இது. இதற்கு திரைக்கதை அமைத்து அதற்கு 'எங்க குலசாமி' என தலைப்பு வைத்து தயார் செய்து தாருங்கள் எனக் கூறி பணமும் அனுப்பிவைத்தேன்.
என்னிடம் ஒப்புக்கொண்டபடி அவர் திரைக்கதை அமைத்து தரவில்லை. அதன் பின்னர் நான் கூறிய ஒருவரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்கச் சொல்லி அதனை வைத்து தற்போது படம் தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்துவருகிறது.
இந்தப் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதையின் கருவும் விவாத பொருளானது. இந்த நிலையில் கடந்த 27ஆம் அன்று சாலிக்கிராமத்தில் உள்ள என் அலுவலகத்திற்கு சில அடியாள்களுடன் மதுபோதையில் வந்த சரவண சக்தி என் ஊழியர்களை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அலுவலக ஊழியர்கள் அவர்களுக்கு தெரியாமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் வருவதற்கு முன்பு சிங்காரவேலனை கொலை செய்து அவரது தலையுடன்தான் செல்வேன் என்று கொக்கரித்துக் கொண்டிருந்த சரவண சக்தியின் கும்பவ் காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரி தெறிக்க அருணாச்சலம் சாலையில் ஓட்டம் பிடித்ததை சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
காவல்நிலையத்திலிருந்து விசாரணைக்கு அழைத்தபோது சரவண சக்தி அலைபேசியை எடுக்கவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டபோது, தான் மதுரையில் இருப்பதாக கூறினார். இன்று காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்கு காவல்நிலையம் வரவேண்டும் என்ற ஆய்வாளரின் உத்தரவுப்படி வரவுள்ளார்.
சரவண சக்தி ஏற்கனவே இயக்கி வெளியான நாயகன் படம், ஸ்பீடு என்கிற ஹாலிவுட் படத்தின் உல்டாவாகும் "பில்லா பாண்டி" படத்தின் கதையும் மூர்த்தி என்பவர் எழுதியதாகும். எங்க குலசாமி என்கிற படத்தின் கதை என்னுடையது என்பதையும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.

இதனால் அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும் என் திரைக்கதை ஏற்படுத்தாது என்று உறுதி கொடுக்கப்பட்டு நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் அவர்களிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை, அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து வெற்றி பெறுவேன் என்பதை உறுதிபட தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்" என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் கே.எஸ். ரவிக்குமாரின் 'மதில்': மனசாட்சிப்படி எதிரிகளை சந்திக்கும் உரிமைக்குரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.