சென்னை: ஆர்யா, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் டீசர் சாதனை படைத்துள்ளது.
ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் எனிமி படத்திற்கு சாம் சி.எஸ். பின்னணி இசை அமைத்துள்ளார். டீசர் மற்றும் இப்படத்தில் சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை அனைத்து தரப்பினரையும் நிச்சயம் கவரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் மூன்று மொழிகளிலும் சேர்த்து ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.