ETV Bharat / sitara

கரோனா தொற்றில் மாட்டிக்கொண்ட 'தி ராக்' குடும்பம்

author img

By

Published : Sep 4, 2020, 8:38 AM IST

குத்துச்சண்டை வீரரும் நடிகருமான 'தி ராக்' தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டுவைன் ஜான்சன்
டுவைன் ஜான்சன்

'ஹெர்குலஸ்', 'பே வாட்ச்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்', 'ஜூமான்ஜி' உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றி, பெருவாரியான குழந்தைகளையும், இளைஞர்களையும் ரசிகர்களாகக் கொண்டிருப்பவர் பிரபல நடிகர் டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் 'தி ராக்' என்றும் அழைப்பர்.

இந்நிலையில், டுவைன் ஜான்சன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி மூலம் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொலியில் டுவைன் ஜான்சன், "நான், எனது மனைவி லாரென், இரு மகள்கள் அனைவருக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பாக கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஒரு குடும்பமாக எங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலான - கடினமான விஷயம். இது எனக்கு அதிக சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற தனித்துவமான சவால்கள் எனக்கு ஏற்பட்டதுண்டு.

ஆனால் மோசமான காயங்களிலிருந்து மீண்டுவருவதைவிட அல்லது வெளியேற்றப்படுவதைவிட கரோனா நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்வது வித்தியாசமானது. ஏனென்றால் எனது குடும்பத்தை பாதுகாப்பதே எப்போதும் என்னுடைய முதல் பணியாக இருக்கிறது.

நல்வாய்ப்பாக எனது குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. எனக்கும் எனது மனைவிக்கும் முதலில் தீவிர அறிகுறிகள் இருந்தாலும் நாங்கள் இப்போது நலமுடன் இருக்கிறோம்.

நாங்கள் இந்த நோய்த்தொற்றை எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அவர்கள் எங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்கள். எங்கள் குடும்பத்தினர் கரோனாவிலிருந்து மீள்வது இதுபோன்ற போராட்டத்தைச் சந்திக்கும் மற்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும்.

உங்கள் அனைவரது பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். என்னுடைய நண்பர்களில் சிலர் தங்களது பெற்றோர்களை இந்தத் தீநுண்மிக்கு இழந்திருக்கின்றனர்.

எனவே கவனமுடன் இருங்கள். உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். முகக்கவசம் அணிந்துகொண்டு உங்கள் குடும்பத்தையும் உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.