நடிகர் ஆர்யாவை வைத்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இதில் ஆர்யாவின் மனைவி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.
திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்ட இவரைப் பலரும் பாராட்டியுள்ளனர். தனக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எல்லா கனவுகளும் நிஜம் ஆகுமான்னு என்ன கேட்டா எனக்குத் தெரியாது. ஆனா ஜூலை 22, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ஆகிருச்சு.
சார்ப்பட்டாவின் வெற்றி இது. என்னால வார்த்தைகலால சொல்ல முடியாத வெற்றி! குடுத்த வேலைய ஒழுங்கா பன்னிருக்கேன்னு ரொம்ப மனசுக்கு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கு. மாரியம்மா என் வாழ்க்கைல ரொம்ப சந்தோஷத்த தந்திருக்கா, எல்லாரும் அவள கொண்டாடுறத அவ்வளவு அழகா என்ன ஃபீல் பன்ன வச்சுட்டா.
எல்லாரும் இந்த பொண்ணு வேணாம்னு சொன்னப்ப இவதான் மாரியம்மானு ஆணித்தனமா நம்புன ரஞ்சித் ஐயாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. எல்லாருக்கும் ஒரு சின்ன நம்பிக்கை போதும், எத வேணும்னாலும் பண்ணிடலாம். அப்படி நம்பி, நான் உயிர் குடுத்தவ மாரியம்மா. நான் ரொம்ப விரும்பி மாரியம்மாவாக நடிச்சேன். முதல் பெரிய படம், நீங்க ஒவ்வொருத்தரும் வாழ்த்துகள் சொல்லும்போது ரொம்ப மெய் சிலிர்க்குது, ரொம்ப பயமும் வருது. பெரிய நன்றி எல்லாருக்கும் மாரியம்மாவ சரியான வகைல புரிஞ்சுகிட்டதுக்கு.
படத்துல என் கூட நடிச்ச எல்லாருக்கும் நன்றி மட்டும் சொன்னா பத்தாது. கபிலன் எனக்கு ஒரு பெரிய உருதுணையா இருந்தாரு. படத்துல நடிச்ச எல்லாருமே அவங்க நடிப்பு கொண்டாடப்படனும்னுதான் நடிச்சு இருக்கோம். துணை எழுத்தாளர் தமிழ்ப் பிரபா அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லணும், அவ்வளவு சரளமாக நான் வடசென்னை பேச்சு வழக்கு பேசுறதுக்கு அவர் ஒரு முக்கிய காரணம்.
என் அப்பா, அம்மா, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வெறும் நன்றி மட்டும் ஈடாகாது, ஆனா கண்டிப்பா இவங்க இல்லனா நான் இல்ல. மாரியம்மாவுக்கு எல்லை இல்லாத சந்தோஷம் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாரா இல்லாமல் விக்னேஷ் சிவனுக்கு இரண்டு காதலாம்...