பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், தனது தோழி வள்ளி ஷெட்டி பவானி (28) மற்றும் இரு ஆண் நண்பர்களுடன், ஜூலை 25 அதிகாலை புதுசேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு பகுதியில், இவர்கள் வந்த கார் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் இரு நண்பர்கள், படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் நடராஜன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், யாஷிகா ஆனந்த் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனால், யாஷிகா ஆனந்த் மீது 304ஏ, 337, 279 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
யாஷிகா குடித்துவிட்டு வண்டி ஓட்டியதுதான் இந்த விபத்துக்கு காரணம் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சமீபத்தில் ஐசியூவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட யாஷிகா, தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்திக்கு விளக்கமளித்தார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். வண்டி ஓட்டும்போது நான் குடித்திருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் குடிக்கவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் குடித்திருந்தால் இப்போது சிறையில் இருந்திருப்பேன், மருத்துவமனையில் அல்ல.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
போலியான நபர்கள் போலியான செய்திகளைப் பரப்புவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் நீங்கள் கொஞ்சம் மனிதத் தன்மையையும், இறந்த என் தோழியின்பால் கொஞ்சம் துக்கத்தையும் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அவர் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது குறித்து அவர் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விளக்கத்தை ஏற்று, காவல்துறையினர் கைது நடவடிக்கையை கைவிடுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அப்பா பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்!