ETV Bharat / sitara

அடம்பிடித்த சிறுவன்: சிகிச்சைக்கு உதவிய விஜய்யின் 'பிகில்'... ஆபரேஷன் சக்சஸ்! - சிகிச்சைக்கு உதவிய பிகில்

சென்னை: விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு விஜய் நடித்த பிகில் படத்தைக் காண்பித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகில்
பிகில்
author img

By

Published : Jul 8, 2021, 3:20 PM IST

சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தைச் சேர்ந்த சிறுவன் சசிவர்ஷன் (10), தனது மாமா அரவிந்துடன் கடந்த 6ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அண்ணா சாலை அருகே பட்டுலாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தூக்கக் கலக்கத்தில் அரவிந்த் மீது தவறி விழுந்ததில் சசிவர்ஷனின் நெற்றி, மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே சசிவர்ஷன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சசிவர்ஷனுக்கு ஆழமாகக் காயம் ஏற்பட்டிருந்ததால், மருத்துவர்கள் சிறுவனுக்கு தையல் போட முடிவுசெய்தனர்.

அதற்கு முன்பாக வலி தெரியாமல் இருக்க மருத்துவர்கள் மயக்க ஊசி போட முயன்றபோது, சசிவர்ஷன் பயத்தில் ஊசி போடவிடாமல் அடம்பிடித்துள்ளார்.

இதனையடுத்து சசிவர்ஷனிடம் உனக்கு என்ன பிடிக்கும் என மருத்துவர் ஒருவர் கேட்டுள்ளார். அதற்குச் சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை ரொம்ப பிடிக்கும் என அழுதபடி கூறியுள்ளார்.

உடனே அந்த மருத்துவர் தனது செல்போனில் வைத்திருந்த 'பிகில்' படத்தைப் போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். இதனால் உற்சாகமடைந்த சசிவர்ஷன், செல்போனை கையில் வாங்கி படம் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மருத்துவர்கள், உடனே சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்கும் ஊசியைச் செலுத்தி மருத்துவம் அளிக்கத் தொடங்கினர். தலையில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு நான்கு தையல்களும், மூக்கின் அருகில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மூன்று தையல்களும் போட்டனர்.

இதனைக் கேட்ட நெட்டிசன்கள் இப்படியும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிங்க: மிர்ச்சி சிவா - யோகிபாபு கூட்டணியில் காசேதான் கடவுளடா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.