ETV Bharat / sitara

ரைசா மன்னிப்புக்கேட்டு சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் : மருத்துவர் நோட்டீஸ் - மருத்துவர் பைரவி செந்தில்

சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டுமென நடிகை ரைசா வில்சனுக்கு மருத்துவர் பைரவி செந்தில் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரைசா, Raiza wilson, Raiza wilson new look, மருத்துவர் பைரவி செந்தில்  bairavi senthil
doctor-bairavi-senthil-send-legal-notice-against-actor-raisa-wilson
author img

By

Published : Apr 23, 2021, 10:23 AM IST

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவர் பைரவி செந்திலிடம் நடிகை ரைசா வில்சன் முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன்பின்னர் அவர் கண்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டதாக புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். தனக்கு ஏற்பட்ட விளைவுகளுக்கு தவறான சிகிச்சையே காரணம் என்பதால் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி ரைசா வில்சன், மருத்துவர் பைரவி செந்திலுக்கு எதிராக தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிருந்தார்.

இந்நிலையில், மருத்துவர் பைரவி செந்திலும் அவரது வழக்கறிஞர் ஆர். நாகேஷ்வரராவ் மூலமாக, நடிகை ரைசா வில்சனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், தோல் ஆரோக்கியம், முகப்பொலிவுக்காக தன்னை அணுகியபோது, சிகிச்சைக்கு ஒத்துக்கொள்வதாக தானாக முன்வந்து ஒப்பந்தத்தில் ரைசா கையெழுத்திட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ரைசாவிற்கு ஏற்பட்டுள்ளது பயப்படக்கூடிய பக்கவிளைவுகள் இல்லை என்றும், அரிதாக ஏற்படக்கூடிய விளைவுதான் என்றும், இயற்கையாகவே குணமடையக்கூடிய ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தீடீரென சிகிச்சை குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துக்களை அவர் வெளியிட்டு வருவதாகவும், மற்ற வாடிக்கையாளர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் ரைசாவின் செயல் உள்ளதாகவும், மக்கள் மத்தியில் தனக்குள்ள நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் ரைசா நாடகம் ஆடுவதாகவும் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தை மேற்கொள்காட்டி ஏராளமான வாடிக்கையாளர்கள் கேள்விக் கேட்பதால் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படைந்துள்ளதாகவும், மூன்று நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ரைசா வில்சனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மன்னிப்பு கோரி அதை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் எனவும், மன்னிப்பு கேட்காவிட்டால் மானநஷ்ட வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைரவி செந்திலின் வழக்கறிஞர் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.