தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் யோகிபாபு.இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பட்டிபுலம்' என்ற படத்தில் யோகிபாபு பேயாக நடித்துள்ளார். நகைச்சுவை கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும்இப்படத்தில் வீரசமர் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்நிலையில் 'பட்டிபுலம்' திரைப்படம் இன்று வெளியாவதையொட்டி சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணிதியேட்டரில் நடிகர் யோகிபாபுவிற்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யபோவதாக ரசிகர்கள் அறிவித்திருந்தனர். இதுவரை படத்தின் கதாநாயகர்களுக்கு மட்டுமே பாலாபிஷேகம் செய்துவந்த ரசிகர்கள் முதன்முறையாக ஒரு காமெடி நடிகருக்கு பாலாபிஷேகம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இதனையடுத்து, இன்று காலை பால் அபிஷேகம் நடைபெறவிருந்த இந்த நிகழ்வைக் கேள்விப்பட்ட நடிகர் யோகிபாபு, '
'ரசிகர்களின் அன்பையும் பாசத்தையும் நான் மதிக்கிறேன். உங்கள் அன்பிற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம்கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்துதான் அன்பைக்காட்ட வேண்டும் என்பதில்லை. உணவுப் பொருளை வீணாக்க வேண்டாம்' என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, நடிகர் யோகி பாபுவின் வேண்டுகோளை ஏற்ற அவரது ரசிகர்கள் கட் அவுட்டுக்கு பாலபிஷேக கொண்டாட்டத்தை ரத்து செய்தனர்.
என தற்போது இந்த செய்தி வலைதளபக்கங்களில் காட்டுத்தீபோல் பரவி வருகிறது. நடிகர் யோகிபாபு போல் பெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கு அறிவுறுத்தினால் நன்றாக இருக்கும், உயிர் இழப்பும் ஏற்படாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.