ETV Bharat / sitara

மீண்டும் திறக்கும் டிஸ்னி தீம் பார்க்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த டிஸ்னி தீம் பார்க் ஜூலை மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 12, 2020, 2:37 AM IST

டிஸ்னி தீம் பார்க்
டிஸ்னி தீம் பார்க்

கலிபோர்னியாவின் அனாஹெய்மில் உள்ள டிஸ்னி தீம் பூங்காக்கள் கோவிட் -19 தொற்று நோய் அச்சம் காரணமாக மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மூடப்பட்டுள்ளது.

டிஸ்னிலேண்ட் ரிசார்ட், டிஸ்னிலேண்ட் பார்க் மற்றும் டிஸ்னி கலிபோர்னியா அட்வென்ச்சர் பார்க் ஆகியவை ஜூலை 17ஆம் தேதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 17ஆம் தேதி டிஸ்னிலேண்ட் பூங்கா நிறுவப்பட்டு 65 ஆவது ஆண்டாகும். எனவே அன்றைய தினம் பூங்காவை திறக்க ஒப்புதல் வழங்குமாறு அந்நிறுவனம் உள்ளூர் நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கூடவே டிஸ்னி மாவட்டத்திலுள்ள டவுன்டவுனில் இருக்கும் டிஸ்னி & கிராண்ட் கலிஃபோர்னிய ஹோட்டல் & ஸ்பாவை ஜூலை 9ஆம் தேதியும்
டிஸ்னி & பாரடைஸ் பியர் ஹோட்டலை ஜூலை 23 ஆம் தேதி மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளன.

இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் டிஸ்னி தீம் பார்க்கில் உலக சுகாதார அமைப்பினர் கூறிய சுகாதார- பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகள், இரவு நேர கேளிக்கைகள் உள்ளிட்டவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். தீம் பார்க்கில் வருபவர்களை கவரும் விதமாக புதிய வழிகளில் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தகுந்த இடைவெளியே கடைபிடிக்கும் விதமாக தீம் பார்க்கிற்கு வருபவர்கள் முன்பதிவு அவசியம் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.வட அமெரிக்காவின் மற்றொரு முதன்மை தீம் பார்க், புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் அடுத்த மாதம் ஒரே கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று டிஸ்னி மே மாதம் இறுதியில் அறிவித்தது.

ஷாங்காயில் இருக்கும் டிஸ்னிலேண்ட் மே 11ஆம் தேதி திறக்கப்பட்டது. உலகளவில் ஆறு டிஸ்னி தீம் பூங்காக்களில் பார்வையாளர்களை மீண்டும் வரவேற்பதில் இது முதலிடம் வகிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.