ETV Bharat / sitara

கரோனா அச்சம்: ப்ளாக் விடோ வெளியாகும் தேதி ஒத்திவைப்பு! - ப்ளாக் விடோ

'அவெஞ்சர்ஸ்' கேரக்டர்களுக்கு பின்னணிக் கதை சொல்லப்பட்ட நிலையில், படத்தின் சூப்பர் வுமன் ஹீரோயினாகத் தோன்றும் 'ப்ளாக் விடோ'-வின் பெயரில் தற்போது படம் தயாராகியுள்ளது. 'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களின் முக்கிய கேரக்டராகத் திகழும் பிளாக் விடோவின் பின்னணி கதை குறித்து இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

Black Widow
Black Widow
author img

By

Published : Mar 18, 2020, 10:23 PM IST

லேடீஸ் சூப்பர் ஹீரோயினான நடாஷா ரோமனாஃப், ஸ்கார்லெட் ஜோஹான்சன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாக் விடோ' படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

'அவெஞ்சர்ஸ்' சீரிஸ் படங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் 'ப்ளாக் விடோ'. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாரில்' ப்ளாக் விடோவாக நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன், ப்ளாக் விடோ படத்திலும் நடித்திருக்கிறார். ப்ளாக் விடோவின் கதை கேப்டன் அமெரிக்காவின் சிவில் வாருக்கு பின்பும், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வாருக்கு முன்பும் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் நடாஷா ரோமனாஃப், ”என்னைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியாது. அவெஞ்சர்ஸ் என் முதல் குடும்பமும் அல்ல” என்கிறார். ப்ளாக் விடோவாக தோன்றும் ஸ்கார்லெட் ஜோகான்சன், மற்றொரு ப்ளாக் விடோவும் தனது சகோதரியுமான ஃபுளோரன்ஸ் பக்கை சந்திக்கிறார்.

இதையடுத்து இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து எதிரிகளோடு சண்டையிடும் விதமாக 2 நிமிடம் 23 விநாடிகள் ஓடும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. அனைத்து 'அவெஞ்சர்ஸ்' கேரக்டர்களுக்கும் பின்னணிக் கதை சொல்லப்பட்ட நிலையில், படத்தின் சூப்பர் வுமன் ஹீரோயினாகத் தோன்றும் 'ப்ளாக் விடோ'-வின் பெயரில் தற்போது படம் தயாராகியுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவத்திருந்த நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக வெளியிடும் தேதியைக் காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.