ETV Bharat / sitara

நடன சேலன்ஞ் அறிவித்த டிஸ்கவரி தொலைக்காட்சி

ரஜினிகாந்த் பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில் டிஸ்கவரி தொலைக்காட்சி புதிய நடன சேலன்ஞ் ஒன்றை அறிவித்துள்ளது.

நடன சேலன்ஞ் அறிவித்த டிஸ்கவரி தொலைக்காட்சி
நடன சேலன்ஞ் அறிவித்த டிஸ்கவரி தொலைக்காட்சி
author img

By

Published : Mar 7, 2020, 12:59 PM IST

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற ’மேன் வெர்சஸ் வைல்ட்’ படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார். அப்படப்பிடிப்பில் ரஜினிக்கு சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உலகம் முழுவதும் ட்ரெண்டான இந்நிகழ்ச்சி வரும் 23ஆம் தேதி டிஸ்கவரி தொலைக்காட்சியில் 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கிடையில் நேற்று டிஸ்கவரி தொலைக்காட்சியில், 'இது ஒரு மாஸ்னா கொண்டாட்டம். சவால் எடுத்து கொண்டு பார்ட்டியில் கலந்து கொள்ளுங்கள். இந்த லிங்கை கிளிக் செய்து உங்களது நடனத்தை #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ் டேக் குறிப்பிட்டு பதிவிடுங்கள்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், '‘on-u-rajini mode-u, bear odu'' என்று தொடங்கும் அந்தப் பாடல் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லால் சிங் சத்தா பட அப்டேட் கொடுத்த மோனா சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.