ETV Bharat / sitara

இயக்குனர் சங்கத் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி, அமீர் போட்டி? - Directors R.K.Selvamani, Ameer

சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, அமீர் ஆகியோர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ameer
author img

By

Published : Jul 10, 2019, 10:57 PM IST

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியோடு நிறைவடைந்தது.

இதில் தலைவர் பதவிக்கான போட்டியில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரை எதிர்த்து இயக்குனர் அமீர் போட்டியிடுகிறார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை இறுதிப் பட்டியல் வெளியாகும் என தேர்தல் அலுவலரான செந்தில்நாதன் தெரிவித்தார்.

முன்னதாக இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர் பாரதிராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டதற்கு, நூறாவது பொதுக்குழுவில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பாரதிராஜா தனது தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு ஆர் கே செல்வமணி, அமீர் போட்டிBody:தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் வருகின்ற 21 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது அதை தொடர்ந்து இன்று அனைத்து பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணி வரை முடிவடைந்துள்ளது. ஏற்கனவே பாரதிராஜா போட்டியின்றி தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க பட்டதால் நூறாவது பொதுக்குழுவில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனை தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா தனது தலைவர் பதவியை ஏற்க மறுத்தார் இன்றுடன் வேட்புமனு மக்கள் முடிந்துள்ள நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இயக்குனர் ஆர் கே செல்வமணி போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரை எதிர்த்து இயக்குனர் அமீர் போட்டியிடுகிறார் என்றும் எதிர்பார்க்க படுகிறது. Conclusion:இதனை தொடர்ந்து நாளை இறுதிப் பட்டியல் வெளியாகும் என தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.