'தா தா 87' என்னும் ஆக்ஷன் திரைப்படத்தினை அறிமுக இயக்குநரான விஜய் ஸ்ரீ ஜி சாருஹாசனை வைத்து இயக்கியிருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷின் தாய்வழிப் பாட்டியான சரோஜா, நடிகர் ஜனகராஜ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரிய டான் படமாக இருந்தும் இப்படம் விமர்சகர்கள் மத்தியில் முரணான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ள நிலையில், 'தா தா 87' படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீ ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில், நடிகர் சாருஹாசன் தனது 90 வயதிலும் நடித்துவருவதாகவும், இந்திய நடிகர்களிலேயே வயதான நடிகர் என்னும் சாதனையை படைத்திருப்பதாகவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி 'தபெரனா கதெ' என்னும் கன்னடத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று கர்நாடக அரசு திரைப்பட விருதும் சாருஹாசன் பெற்றிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்த விஜய் ஸ்ரீ ஜி, உலக அளவில் 90 வயதில் நடித்துவரும் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ’அருண்விஜய் 30’ படத்தின் டைட்டிலை வெளியிட்ட 'கைதி'...!