நடிகர் சாருஹாசனை வைத்து 'தாதா 87' படத்தை இயக்கியவர் விஜயஶ்ரீ. இவர் தற்போது 'பப்ஜி', 'பவுடர்' படங்களை இயக்கி வருகிறார். தனது 'தாதா 87' படத்தை அனுமதி இல்லாமல் தெலுங்கில் ரீமேக் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாரு ஹாசனை வைத்து நான், எழுதி இயக்கிய படம் 'தாதா 87'. தற்சமயம் பவுடர், பப்ஜி ஆகிய படங்களை இயக்கி வருகிறேன்.
ஒன் பை டூ
இன்று (ஜூலை 27) காலை யூ-ட்யூப்பில் நடிகர் சாய் குமார் நடிப்பில் 'ஒன் பை டூ' என்ற பெயரில் 'தாதா 87' படத்தை அனுமதி இல்லாமல் ரீமேக் செய்து வரும் விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். ரஜினியின் 'காலா' டீசருடன் 'தாதா 87' படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்ததை, அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள். அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்குப் பதில் சாய் குமார் நடிப்பில் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று (ஜூலை 27) டீஸராக வெளியிட்டுள்ளார்கள். இதனைப் பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்.
இனிஷியலை மாற்றுவதற்குச் சமம்
முறையாக அனுமதி பெற்று, என் கதையின் கருவை, என் பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியலை மாற்றுவதற்குச் சமமானது எனப் பெரியவர்கள் கூறுவார்கள்.
தற்போது இதுபோல் பல படங்களின் கதை திருடப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக 'தாதா 87' படத்தின் கருவைச் சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷின் காமன் டிபியை வெளியிட்ட செல்வா