இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து, தற்போது முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக உயர்ந்துள்ள இயக்குநர் வெற்றிமாறன், இலவச சினிமா பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளார்.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய தமிழ்நாடு மாணவர்களுக்காக இயக்குநர் வெற்றி மாறன், டாக்டர். ராஜ நாயகம், வெற்றி துரைசாமி ஆகியோரின் முன்னெடுப்பில், ஏப்ரல் 2021 இல் தமிழ் புத்தாண்டு அன்று திரை- பண்பாட்டு ஆய்வகம் (IIFC) தொடங்கப்பட்டது.
இதில் மாவட்டத்திற்கு ஒரு மாணவர் என நலிந்த முதல் தலைமுறை மாணவர்களை கண்டறிந்து சினிமா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆய்வகத்தின் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக, இரண்டாம் சுற்று எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் 5 இடங்களில் (சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி ) அக்டோபர் 24ஆம் நடைபெறவுள்ளது.
மொத்தம் 1,450 மாணவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கிறார்கள். திரை- பண்பாட்டு ஆய்வகம் (IIFC) அதன் முதுகலை பட்டயப்படிப்பின் முதல் ஆண்டில் 40 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளது.
பட்டயப்படிப்பின் கல்வி காலம் 1 வருடம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவுக்கு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றிமாறனின் சினிமா பயிற்சி வகுப்பு - ஏழை மாணவர்களுக்கு உதவி!