ETV Bharat / sitara

HBD Chimbu Deven - இம்சை அரசன் சிம்புவுக்கு பிறந்தநாள்

இயக்குநர் சிம்பு தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

சிம்பு தேவன்
சிம்பு தேவன்
author img

By

Published : Nov 23, 2021, 7:27 AM IST

பொதுவாக பேன்டஸி திரைப்படங்களுக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான பேன்டஸி திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மட்டுமே வெளியாகிறது. இந்தியாவில் ஒரு சில இயக்குநர்கள் மட்டுமே பேன்டஸி திரைப்படங்களை இயக்கி, வெற்றி பெற்றுவருகின்றனர்.

மாறுபட்டச் சிந்தனை

அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளவர்தான் இயக்குநர் சிம்பு தேவன். வழக்கமான மசாலா படங்கள் இயக்கிவரும் இயக்குநர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனையால் வித்தியாசமாக யோசனை செய்து, பேன்டஸி படங்களை இயக்கிவருகிறார்.

சேரனிடம் உதவி இயக்குநர்

வெற்றிக்கொடிகட்டு படத்தில் இயக்குநர் சேரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலம் இவரது பயணம் தொடங்கியது. இதனையடுத்து 'இம்சை அரசன் 23.ம் புலிகேசி' படம் மூலம் இயக்குநராகக் கோலிவுட்டில் அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே பம்பர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்தது. இன்று வரை வடிவேலுவை அதுபோன்று யாருமே திரையில் காண்பிக்க முடியாது என்று ரசிகர்கள் அப்படத்தைக் கொண்டாடிவருகின்றனர்.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'அறை எண் 305ல் கடவுள்', 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்', 'புலி'என முற்றிலும் வித்தியாசமான படங்களைக் கொடுத்துவருகிறார்.

புலி பட புகைப்படம்
புலி பட புகைப்படம்

பேன்டஸி திரைப்படங்கள் இயக்கி கலக்கிவந்த சிம்பு தேவன் தற்போது பிரபலமாகிவரும் ஆந்தாலஜி திரைப்படங்களையும் இயக்கிவருகிறார். கடைசியாக இவர், 'கசடதபற' ஆந்தாலஜி படத்தை இயக்கி அதில் வெற்றியும் பெற்றார்.

இந்நிலையில் மாறுபட்ட சிந்தனையால் வித்தியாசமான படங்கள் இயக்கிவரும் சிம்பு தேவன் இன்று (நவம்பர் 23) தனது 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய்சேதுபதியின் 'கடைசி விவசாயி' ட்ரெய்லர் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.