அஜித், தேவயானி, ஹீரா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களின் சமூக வலைதளங்கள் வாயிலாக அந்தத் திரைப்படத்தை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில் இயக்குநர் திருவும் காதல் கோட்டை திரைப்படத்தை நினைவுகூர்ந்தார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "திரைக்கதையின் இலக்கணத்தை மாற்றிய திரைப்படம்" என்று குறிப்பிட்டு அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற நலம் நலம் அறிய ஆவல் பாடல் வரிகள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றையும் திரு பகிர்ந்திருந்தார்.
-
The movie that changed the grammar of Screenplay!! #kadhalkottai #24YearsOfKadhalKottai #Thala @ahathians pic.twitter.com/f8Ip28JVAm
— Thiru (@dir_thiru) July 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The movie that changed the grammar of Screenplay!! #kadhalkottai #24YearsOfKadhalKottai #Thala @ahathians pic.twitter.com/f8Ip28JVAm
— Thiru (@dir_thiru) July 12, 2020The movie that changed the grammar of Screenplay!! #kadhalkottai #24YearsOfKadhalKottai #Thala @ahathians pic.twitter.com/f8Ip28JVAm
— Thiru (@dir_thiru) July 12, 2020
இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் உருவான காதல் கோட்டை படத்துக்கு இயக்குநர் தங்கர் பச்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இயக்குனர் திரு, தீராத விளையாட்டு பிள்ளை, சமர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...1 மில்லியன் ஃபாலோயர்களுக்கு நன்றி தெரிவித்து மக்கள் செல்வன்!