சென்னை: 'கட்டப்பாவ காணோம்' படத்தின் இயக்குநர் மணி செயோன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை வி.ஆர். டெல்லா ஃபிலிம் பேக்டரி சார்பாக மணிகண்டன் தயாரிக்கிறார். க்ரைம் டிராமாவாக உருவாகும் இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
இதையும் படிங்க: 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி - சந்தோஷ் நாராயணன் நெகிழ்ச்சி