ETV Bharat / sitara

இயக்குநர் சங்கருக்கு பிடியாணை ? - இயக்குநர் ஷங்கருக்கு பிடியாணை

சென்னை: தனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்திக்கு இயக்குநர் ஷங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

director Shankar
ஷங்கர்
author img

By

Published : Feb 1, 2021, 10:56 PM IST

கடந்த 1996ஆம் ஆண்டு 'இனிய உதயம்' தமிழ்ப் பத்திரிகையில் நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் கவிஞருமான ஆரூர் தமிழ்நாடன் எழுதிய 'ஜுகிபா' என்ற கதை வெளியானது. இந்தக் கதையை இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படமாக எடுத்ததாக ஆரூர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் சங்கருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக இயக்குநர் சங்கர் விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ’எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமார் இன்று நீதிமன்றத்தை அணுகி இந்தச் செய்தியை அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். எனக்கெதிராக எந்த வாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக நீதிபதி உறுதி செய்தார்.

director Shankar
ஷங்கர் விளக்கம்

இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுவதில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரி பார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மனஉளைச்சலைத் தந்துள்ளது. இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:எந்திரன் கதை திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு பிடியாணை: நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.