தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'அசுரன்'. எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை’ நாவலைத் தழுவி வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி, இந்திய அளவில் பலரது கவனத்தை ஈர்த்தது.
அதுமட்டுமல்லாமல் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்த ஆண்டின் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த பாலிவுட் இயக்குநர் ஷமஸ் நவாப் சித்திக், எதிர்காலத்தில் கண்டிப்பாக தனுஷூடன் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சூப்பர் ஸ்டார் தனுஷ் நடித்த படங்களின் கலெக்ஷனைப் பார்த்து முடித்திருக்கிறேன். அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டுள்ளேன். கண்டிப்பாக, எதிர்காலத்தில் அவருடன் நல்ல கதையில் பணிபுரிவேன்' என்று பதிவிட்டுள்ளார்.
-
Just finished to watch a film's collection of super star @dhanushkraja .... impressed, defiantly I will try to work with him with a good script in future ..👍 pic.twitter.com/phGnbVsOdj
— Shamas N Siddiqui (@ShamasSiddiqui) November 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just finished to watch a film's collection of super star @dhanushkraja .... impressed, defiantly I will try to work with him with a good script in future ..👍 pic.twitter.com/phGnbVsOdj
— Shamas N Siddiqui (@ShamasSiddiqui) November 25, 2019Just finished to watch a film's collection of super star @dhanushkraja .... impressed, defiantly I will try to work with him with a good script in future ..👍 pic.twitter.com/phGnbVsOdj
— Shamas N Siddiqui (@ShamasSiddiqui) November 25, 2019
ஷவல் நவாப் 'பேட்ட' படத்தில் 'சிங்காரம்' கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் சகோதர் ஆவார். ஷவல் நவாப் தற்போது நவாசுதீன் சித்திக் - தமன்னா நடிப்பில் உருவாகிவரும் 'போல் சுடியான்' படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: