கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்ற பாதையை தனித்தே உருவாக்கியுள்ளவர் இயக்குநர் சீனுராமசாமி.
பசுமை மாறாத கிராமத்து காவியங்களை இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கோணத்தில் சித்தரிக்கும் கைவண்ணம் கொண்ட சீனுராமசாமி, வாழ்க்கை இயலை வழக்கத்துக்கு மாறாமல் இயல்பாக மக்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்.
கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா வரிசையில் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்த்திரையுலகம் கொண்டாடும் இயக்குநர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சீனுராமசாமி, மதுரையில் பிறந்தவர்.
சினிமா மீது கொண்ட தீராத காதலால் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின் கூடல் நகர் படம் மூலம் அறிமுகமானார். 2010ல் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படமே இவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது. இரண்டாவது படத்தின் வெற்றி சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்து அவருக்கு மகுடம் சூட்டியது.
இப்படி இருக்க தற்போது கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து தனது வெற்றி நாயகனான விஜய்சேதுபதியை வைத்து மாமனிதன் படத்தை இயக்கிவருகிறார் சீனு.
இதனிடையே தனக்கும் சினிமாவுக்குமிடையே உள்ள மிக நெருங்கிய தொடர்பையும், பால்யத்தை நினைவுகூறும் வகையிலும் சீனுராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில், தான் சிறுவயதுமுதல் மதுரை மாநகரில் உள்ள பல்வேறு திரையைரங்குகளில் பார்த்த படங்களின் டிக்கெட்டுக்களை புகைப்படமாக பதிவிட்டு 'எம்மை வளர்த்த மதுரையின் முகவரிகள்...' எனக்குறிப்பிட்டுள்ளார்.
-
எம்மை வளர்த்த மதுரையின் முகவரிகள். #Madurai pic.twitter.com/OzjdFsPX9y
— Seenu Ramasamy (@seenuramasamy) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">எம்மை வளர்த்த மதுரையின் முகவரிகள். #Madurai pic.twitter.com/OzjdFsPX9y
— Seenu Ramasamy (@seenuramasamy) December 4, 2019எம்மை வளர்த்த மதுரையின் முகவரிகள். #Madurai pic.twitter.com/OzjdFsPX9y
— Seenu Ramasamy (@seenuramasamy) December 4, 2019
சீனுராமசாமியின் இந்த பதிவு திரையுலகினருக்கு பால்யத்தை நினைவூட்டும் வகையில் இருப்பதாகவும், மண்வாசம் மாறாத மதுரையை என்றும் மறக்காமல் தனது படங்களில் பிரதிபலிக்கச் செய்துவருவதற்கு பாரட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.