ETV Bharat / sitara

தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது இயக்குநர் சரவண சக்தி கதை திருட்டு புகார் - story theft complaint

சென்னை: தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான சரவண சக்தி கதை திருட்டு புகார் அளித்துள்ளார்.

afds
dasf
author img

By

Published : Mar 29, 2021, 7:15 PM IST

Updated : Mar 29, 2021, 8:00 PM IST

'குட்டிபுலி' மூலம் நடிகராக அறிமுகமானவர் சரவண சக்தி. இவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். மேலும், ஜே.கே.ரித்தீஷ் நடித்த 'நாயகன்' ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் நடிகர் விமலுடன் இணைந்து MIK Productions No.1 சார்பில் தயாராகும் படத்தை இயக்க திட்டமிருந்தார். அப்படத்திற்கு 'குலசாமி' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இருப்பினும், 'குலசாமி' என்று தற்காலிகமாக சூட்டப்பட்ட பெயரை கில்ட் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தார் சரவண சக்தி. மேலும், 25.01.2021 அன்று அப்படத்திற்காக பூஜையும் போடப்பட்டது. இப்படத்திற்கான தலைப்பு மற்றும் முதல்பார்வை போஸ்டரை விரைவில் வெளியிட இப்படக்குழு திட்டமிட்டிருந்தது.

ஆனால், சில நாள்களுக்கு முன்பு ராக் ஸ்டார் நடிக்கும் 'எங்க குலசாமி' என்று படத்தின் முதல் பார்வை போஸ்டருடன் அப்படத்தின் பத்திரிக்கை செய்தியும் வெளியானது. அந்த செய்தியை சரவண சக்தி படிக்கும்போது, தான் சிங்காரவேலனிடம் கூறிய கதையும் 'எங்க குலசாமி' படத்தின் கதையும் ஒரே மாதிரியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கு முன் இவர் சிங்காரவேலனிடம், இருவரும் இணைந்து இப்படத்தை எடுப்போம் என்று கூறியதாகவும் அதற்கு சிங்காரவேலன் ஒப்புக் கொண்டதாகவும் அதற்காக இரண்டு நாள் அலுவலக வேலையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது இப்படத்தின் கதையை அவரிடம் நம்பிக்கையின் பெயரில் கூறியிருக்கிறார்.

பிறகு சில காரணங்களால் அவருடன் இணைந்து அப்படத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால், MIK Production (P) Ltd தயாரிப்பில் இப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துவிட்டார். இப்போது அதே கதையை ராக் ஸ்டார் என்பவரை வைத்து சிங்கார வேலன் எடுக்கவுள்ளார் என்பதையறிந்த சரவண சக்தி, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கில்டு மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் சரவணசக்தி செய்தியாளர் சந்திப்பு

இது ஒருபுறம் இருக்க, பிரபல பத்திரிகையில், இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் 'குலசாமி' என்ற படத்தின் ஒட்டுமொத்த காப்பி ரைட் உரிமை எனது கட்சிக்காரர் கே.விக்னேஷ் குமாரிடம் உள்ளது. எனது கட்சிக்காரரின் அனுமதி இல்லாமல் யாரேனும் இப்படத்தை விற்க முயல்வதோ வாங்க முயல்வதோ சட்டப்படி குற்றமாகும். மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வழக்கறிஞர் A.M.ரவீந்திரநாத் ஜெயபால் மூலம் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதனால் இவர் இயக்கும் 'குலசாமி' படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதற்கு நியாயம் கேட்பதற்காக சிங்காரவேலன் அலுவலகத்திற்கு சரவண சக்தி சென்றுள்ளார். அப்போது சிங்காரவேலன் அங்கு இல்லை, விக்னேஷ் என்பவர் இருந்துள்ளார். அவரிடம் விசாரிக்கும்போது என் பெயர் விக்னேஷ் ஆனால், அந்த அறிவிப்பில் உள்ள விக்னேஷ் நானில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், 'எங்க குலசாமி' படத்திற்காக ஒப்பந்த சிங்காரவேலன் ஒப்பந்தம் செய்த அறிமுக நாயகன் ராக் ஸ்டாரும் அங்கு இருந்துள்ளார். அவரிடம் கேட்டதற்கு என்னிடம் ஒரு கதை இருக்கிறது நீங்கள்தான் நாயகன் என்றும், இப்படம் OTTயில் வெளியாகும் என்று என்னிடம் கூறினார்கள். இது தவிர வேறு எந்த விவரமும் எனக்கு தெரியாது என்று ராக் ஸ்டார் கூறியுள்ளார்.

இயக்குநர் சரவண சக்தி

சிங்காரவேலன் நடிகர் விமலை வைத்து 'மன்னர் வகையறா' என்ற படத்தை தயாரித்ததன் மூலம் விமல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இதை செய்திருக்கிறார். மேலும், இதில் அவர் பெயர் வெளிவராத வண்ணம் அவருடைய அலுவலகத்தில் இருக்கும் ஒருவரை வைத்து இந்தப் புகாரை கொடுத்திருக்கிறார்.

இவர் மீதும் இவர் நிறுவனத்தின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு இன்று (29.03.2021) விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சரவண சக்தி புகார் அளித்துள்ளார்.

Last Updated : Mar 29, 2021, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.