ETV Bharat / sitara

கதைகளின் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி - santha bhrathi

கதைகளின் மூலம் தமிழ் சினிமாவை ரசிக்கவைத்த இயக்குநர் மறைந்த மகேந்திரனின் உடலுக்கு இயக்குநர் சந்தானபாரதி, நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சந்தானபாரதி
author img

By

Published : Apr 2, 2019, 2:29 PM IST

'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்' படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் இன்று காலை உடல்நலக் குறைவால் சென்னை பள்ளிக்கரணையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா, மணிரத்னம், நடிகைகள், சுஹாசினி, ரேவதி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

varalaxmi sarathkumar
வரலட்சுமி சரத்குமார்

மேலும், அரசியல் தலைவர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

akaththiyan
அகத்தியன்

இந்நிலையில, இயக்குநர் சந்தான பாரதி, அகத்தியன், திரு, நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் தலைவாசல் விஜய் ஆகியோர் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, இயக்குநர் சந்தான பாரதி மகேந்திரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், தமிழ் சினிமா ரசிகர்கள் இயக்குநர் மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக வலைதள பக்கத்தில் #RIPmahendran என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கி அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

Thalaivasal vijay
தலைவாசல் விஜய்

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.