விஷாலை வைத்து 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனை வைத்து 'ஹீரோ' படங்களை இயக்கியவர் பி.எஸ். மித்ரன். இவர் தற்போது கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் சூர்யாவின் 'சிங்கம் 2', கார்த்தியின் 'தேவ்', த்ரிஷாவின் 'மோகனி' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளது. தற்காலிகமாக இந்தப் படத்திற்கு புரொடக்ஷன் 4 என தலைப்பு வைத்துள்ளனர்.
-
#Deepavali greetings to one & all. On this festive day, we are glad to announce the commencement of our next production. Starring @Karthi_Offl Dir by @Psmithran produced by @lakku76 Music by @gvprakash
— Prince Pictures (@Prince_Pictures) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Looking forward to your love & support.#Karthi_PSMithran #PrincePictures4 pic.twitter.com/1bLfYrGRAx
">#Deepavali greetings to one & all. On this festive day, we are glad to announce the commencement of our next production. Starring @Karthi_Offl Dir by @Psmithran produced by @lakku76 Music by @gvprakash
— Prince Pictures (@Prince_Pictures) November 14, 2020
Looking forward to your love & support.#Karthi_PSMithran #PrincePictures4 pic.twitter.com/1bLfYrGRAx#Deepavali greetings to one & all. On this festive day, we are glad to announce the commencement of our next production. Starring @Karthi_Offl Dir by @Psmithran produced by @lakku76 Music by @gvprakash
— Prince Pictures (@Prince_Pictures) November 14, 2020
Looking forward to your love & support.#Karthi_PSMithran #PrincePictures4 pic.twitter.com/1bLfYrGRAx
ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தீபாவளியான இன்று (நவம்பர் 14) இப்படத்துக்கு பூஜையும் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்கவுள்ள நாயகி, மற்ற கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி தற்போது சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.