வித்தியாசமான கதைக் களங்களோடு தனக்கே உரித்தான பாணியில் சினிமா எடுப்பதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட புதிய முயற்சியாக அமைந்தது.
இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக நீண்ட நாள்கள் ஒத்திகை நடந்துவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
-
Proud moment!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thanks lot SIR! https://t.co/K2Ymc7FJ57
">Proud moment!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 27, 2021
Thanks lot SIR! https://t.co/K2Ymc7FJ57Proud moment!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 27, 2021
Thanks lot SIR! https://t.co/K2Ymc7FJ57
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.