இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் திரையுலகில் தலித்திய கருத்துகளைப் பேசி தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். நீலம் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படங்களைத் தயாரித்தும்வருகிறார். இவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ பல்வேறு தரப்பினரிடையேயும் பாராட்டுகளைப் பெற்றதோடு பல விருதுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த ட்வீட்டில், ’நீலம் தயாரிப்பு நிறுவனம் பத்ரி கஸ்தூரியின் ஷ்ரதா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இதை அறிமுக இயக்குநர் சுரேஷ்மாரி இயக்குகிறார். மெட்ராஸ் திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருந்த கலை கதாநாயகனாக அறிமுகமாகிறார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.