‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலேயே நார்வே பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைத் தட்டிச் சென்றார்.
இதனையடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். தொடர்ந்து மூன்றாவதாக நடிகர் விஜய்யை வைத்து, ’தளபதி 65’ படத்தை இயக்கிறார். குறைவான காலத்திலேயே விஜய்யை இயக்கும் இவர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூன் 21) இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறிவருகின்றனர்.
மேலும் நெல்சன் திலீப்குமாரின் பிறந்தநாள், நாளை விஜய்யின் பிறந்தநாளையொட்டி, ’தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூன் 21) மாலை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புல்லட், டார்கெட், வெறித்தனம்: ட்விட்டரை அதிரவிடும் விஜய் ரசிகர்கள்