ETV Bharat / sitara

'குட்டிஸ்டோரி' புது அனுபவம்: இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்! - குட்டி ஸ்டோரி வெளியாகும் தேதி

சென்னை: 'குட்டி ஸ்டோரி' படத்தில் முதலில் நான் நடிப்பதாக இல்லை என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

director Gautham
director Gautham
author img

By

Published : Feb 6, 2021, 4:35 PM IST

வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. ஆந்தாலஜி வகைமையைச் (genre) சேர்ந்த இப்படத்தை இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழில் முதன் முறையாக நான்கு இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி வகைமைத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

கெளதம் மேனன் இயக்கிய கதையில் அவரே நாயகனாக நடித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ள கதையில் மேகாஆகாஷ் நாயகியாகவும் அமிர் டாஸ் பிரதான், ஆர்யா, சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்கியுள்ள கதையில் வருண் சங்கீதா, சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்துள்ளனர்.

கெளதம் வாசுதேவ் மேனன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

குட்டி ஸ்டோரி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் ஐசரி கணஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில் நான்கு இயக்குநர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம். நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது. என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன் நாயகியாக அமலாபால் நடித்து உள்ளார். முதலில் நான் நடிப்பதாக இல்லை. ஆனால் படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு நானே நடிக்க முடிவு செய்தேன். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.