ETV Bharat / sitara

'கார்த்திக் - ஜெஸியின் காதல் பயணம் தொடரும்' : கௌதம் மேனன் - விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் குறித்து கௌதம் மேனன்

கௌதம் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் வெளியான 48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இதுகுறித்த தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் கௌதம்.

director Gautham menon on Vinnaithaandi Varuvaayaa sequel

author img

By

Published : May 23, 2020, 12:21 PM IST

சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் தமிழ் சினிமாவின் காதல் திரைப்படங்களில் மிகவும் முக்கியமானதொரு திரைப்படமாக பார்க்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தனது கருத்தையும் கௌதம் அவ்வப்போது தெரிவித்துவந்தார்.

இதையும் படிங்க... 'விண்மீன்கள் தாண்டியும் வாழும் காதல் இது' 10YearsOfVinnaithaaandiVaruvaayaa

இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் கதைக் கருவை கையில் எடுத்துக்கொண்டு அதன் தொடர்ச்சியாக கார்த்திக், ஜெஸியின் காதலை உறையாடலாக தொலைபேசியில் பகிர்ந்துகொள்ளும் 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற 12 நிமிடக் குறும்படத்தை கௌதம் மேனன் வெளியிட்டார்.

director Gautham menon on Vinnaithaandi Varuvaayaa sequel
'விண்ணைத்தாண்டி வருவாயா'

இதையும் படிங்க... இவன் காதலின் ரசிகன் - HBD Gautham Vasudev Menon

வெளியான 48 மணி நேரத்திலேயே 40 லட்சம் பார்வையாளர்களை குறும்படம் கடந்துள்ளது. இந்தக் குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஆச்சரியம் அடைந்ததாக இயக்குநர் கௌதம் தெரிவித்தார். இது குறித்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், 'ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் அது வெற்றி பெறும். இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. சிம்பு, த்ரிஷா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாது. ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

குறும்படம் என்ற அடைமொழி எதற்கு, புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெஸியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா என்ற கௌதமிடம் கேட்ட கேள்விக்கு இந்தப் பயணம் தொடரும் என்றார் புன்னகையுடன்.

இதையும் படிங்க... 'குறும்படத்தில் குறியீடு வைத்த கௌதம் மேனன்?'

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.