ETV Bharat / sitara

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் தேதி மாற்றம்...!

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம்
author img

By

Published : Jul 2, 2019, 7:27 PM IST

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடத்துவதற்கான முடிவை சங்கத்தின் 99ஆவது பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இதில் ஒருமனதாக இயக்குனர் பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். பின்னர் அனைத்து பொறுப்புகளுக்கும் இரண்டு துணை தலைவர், ஒரு பொது செயலாளர் , 4 இணை செயலாளர்கள் , ஒரு பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 29ஆம் தேதி முடிவடைந்தது . ஜூலை 2ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கபட்ட நிலையில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் 100ஆவது அவசரப் பொதுகுழு வரும் 8ஆம் தேதி கூட்டப்பட்டு ஜூலை 21ஆம் தேதி சங்கத்திற்கான தேர்தல் தேதியாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சங்கத்தில் 3000 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 2400 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

Intro:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தேர்தல் தேதி மாற்றம் .Body:தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் இந்நிலையில் 2019 - 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் நடத்துவதற்கான முடிவை சங்கத்தின் 99 வது பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இதில் ஒருமனதாக இயக்குனர் பாரதிராஜா தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார். பின்னர் அனைத்து பொறுப்புகளுக்கும் அதாவது இரண்டு துணை தலைவர் , 1பொது செயலாளர் , 4 இணை செயலாளர்கள் , 1 பொருளாளர் , 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் விண்ணப்பம் வழங்கப்பட்டது 29 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது . ஜூலை 2 ஆம் தேதி இறுதி பட்டியல் வெளியாகும் என அறிவிக்கபட்டது. ஆனால், நேற்றைய தினம் ஒருமனதாக தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதிவில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து சங்கத்தின் 100 வது அவசரபொதுகுழு வருகின்ற 8 ஆம் தேதி கூட்டப்பட்டு ஜூலை 21 ஆம் தேதி சங்கத்திற்கான தேர்தல் தேதியாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Conclusion:இயக்குனர் சங்கத்தில் 3000 உறுப்பினர்கள் உள்ளனர் அதில் 2400 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.