இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தலைவி'. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும், நடிகர் அரவிந்த் சாமி எம்ஜிஆராகவும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஏ.எல். விஜய் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், 'இது அரசியல் படம் கிடையாது. நாங்கள் அரசியலுக்குள் செல்லவே இல்லை. ஜெயலலிதா ஒரு இன்ஸ்பிரேஷனல் பெண். ஒவ்வொரு பெண்ணுக்கும் அவங்க வாழ்க்கை உத்வேகம் அளிக்கக்கூடியது.
வெற்றி பெற்ற பெண்
ஆணாதிக்கம் மிகுந்த இந்த உலகத்தில் ஒரு பெண் தனியாக நின்று நடிகையாகி, அரசியலிலும் கால்பதித்து இரண்டிலும் வெற்றிபெற்றவர்.
அந்த வகையில் அவரது சினிமா பயணத்தில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்கள் குறித்து படத்தில் பேசியிருக்கிறோம். 1965ஆம் ஆண்டில் வெளியான 'வெண்ணிற ஆடை' படத்தில் ஜெயலலிதா முதன்முதலில் அறிமுகமானார்.
மூன்று மொழிகளில் ரிலீஸ்
அங்கிருந்து கதை ஆரம்பித்து, முதல்முறையாக அவர் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் நிகழ்வு வரை, அதாவது 1991ஆம் ஆண்டுக் காலகட்டம் வரை படத்தில் இருக்கும். இதை இந்தியா முழுமைக்குமான படமாகத்தான் உருவாக்கியிருக்கிறோம். இத்திரைப்படம் இந்தி, தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது.
ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆரின் மேனேஜராக சமுத்திரகனி என்று கதைக்கான ஆட்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஒவ்வொரு கேரக்டரையும் நம் கண்முன் கொண்டு வந்ததில் மேக்கப்மேன் பட்டணம் ரஷீத்துக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது’ என்றார்.
இதையும் படிங்க: ’குருதி ஆட்டம்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு: யுவன் ட்வீட்