ETV Bharat / sitara

மே 18 தமிழர்களின் வாழ்வில் ஒரு போதும் மறக்க முடியாத நாள் - டி.இமான் - முள்ளிவாய்க்கால் போர்

சென்னை: மே 18 தமிழர்களின் வாழ்வில் எதிர்வரும் தலைமுறைகளால் ஒரு போதும் மறக்க முடியாத நாள் என இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளார்.

imman
imman
author img

By

Published : May 18, 2021, 9:25 PM IST

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இன அழிப்பு நாள், உலகத் தமிழர்களை ஒருபோதும் மறக்கச் செய்துவிடாது. அதிலும் மே 17, 18 ஆகிய தினங்களில் முள்ளிவாய்க்காலில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர். இதனையடுத்து விடுதலைப்புலிகளுடான உள்நாட்டுப் போர் முடிவடைந்ததாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நிறைவடைந்து 12 ஆண்டுகளாகியும் இதற்கான நீதி இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. இறுதிப்போரில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி உலகம் முழுவதும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது.

  • May 18th- A Day which can never be forgotten for generations to come in the lives of Tamil. This day of Gore at Mullivaikal will reverberate. The Cry of our lost souls will instigate tons of hope in people to rise with sheer hardwork,confidence and LOVE. pic.twitter.com/KI496emRnr

    — D.IMMAN (@immancomposer) May 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "மே 18 தமிழர்களின் வாழ்வில் எதிர்வரும் தலைமுறைகளால் ஒரு போதும் மறக்க முடியாத நாள். முள்ளிவாய்க்கால் கொடூர நினைவுகள் நம்மைத் தொடர்ந்து உலுக்கிக்கொண்டே இருக்கும். மரணித்த ஆன்மாக்களின் அழுகுரல் மலையளவு நமக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். நம்பிக்கையுடனும் அன்புடனும் உழைக்கவும் மீண்டுவரவும் உதவும்" எனப் பதிவிட்டுள்ளார்.

  • https://t.co/Ajo9SpsttD

    ON REMEMBERING MULLIVAIKKAL MASSACRE DAY.
    i’m honoured and overwhelmed to release the song “MULLIVAIKKAL ENNUM NERUPPU MUNAI”
    lyrics by KAVINGAR -KAASI ANANDHAN
    composed and conceived by - KALAIMAAMANI TL MAHARAJAN

இதைத்தொடர்ந்து மே 18யை நினைவுகூரும் விதமாக கவிஞர் காசி ஆனந்தன் எழுதி கலைமாமணி மகாராஜன் இசையமைத்த 'முள்ளிவாய்க்கால் என்னும் நெருப்புமுனை' பாடலை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.