'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாகப் படக்குழு அண்மையில் தெரிவித்தது.
இத்திரைப்படத்திற்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. இரஞ்சித் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதைத்தொடர்ந்து இந்தச் செய்தி குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே 'கர்ணன்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஹைப் அதிகம் இருக்கும் நிலையில், துருவ் விக்ரமுடன் மாரி செல்வராஜ், பா. இரஞ்சித் இணைவது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க... 'கர்ணன்' தலைப்பு தனுஷ் படத்திற்கு ஏற்றதல்லை - சிவாஜி சமூக நலப்பேரவை