'அசுரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய கேங்ஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
மதுரையை மையப்படுத்தி ஏற்கெனவே 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த நிலையில், தற்போது தனுஷுடன் இணைந்திருக்கிறார். இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மதுரையில் நடைபெறும் நிலையில், தனுஷின் புதிய கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முறுக்கு மீசையுடன் கிராமத்து சண்டியர் போன்ற தோற்றத்தில் இருக்கும் தனுஷின், இந்த புதிய கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஏற்கெனவே ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினி முறுக்கு மீசையில் வந்து ரசிகர்களை குஷி படுத்தியிருந்த நிலையில், தற்போது தனது மாமனாரைப் போன்று மருமகன் தனுஷும் முறுக்கு மீசையை வைத்து வலம் வருகிறார்.
தனுஷ்-ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூட்டணியில் 'பட்டாஸ்' திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை, முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எனக்கு சினிமாவை தவிர வேற எதுவும் தெரியாது - உணர்ச்சிவசப்பட்ட 'காளிதாஸ்' பரத்