கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாறன்’. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
'மாறன்' திரைப்படம் அடுத்தமாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொல்லாத உலகம்’ பாடல் வீடியோ நேற்று முன்தினம் (ஜன. 26) யூ டியூபில் வெளியிடப்பட்டது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
வெளியான 24 மணி நேரத்திலேயே சுமார் 8 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஆரம்பத்தில் புல்லட்டில் செம்ம ஸ்டைலாக படுத்திருக்கும் தனுஷ், பாடலின் எண்டு வரை ஃபுல் எனர்ஜியுடன் ஆடி, நடனத்தால் கவனம் ஈர்த்துள்ளார். ரசிகர்களின் அமோக வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான பெர்த்டே கொண்டாட்டம் !