சென்னை: சொகுசு கார் இறக்குமதி விவகாரத்தில் சொகுசுக் காருக்கான நுழைவு வரியை நடிகர் தனுஷ் முழுமையாக செலுத்திவிட்டதாக வணிகவரித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் கடந்த 2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்த சொகுசுக் காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரி விலக்கு அளிக்க மறுத்ததோடு 48 மணி நேரத்தில் பாக்கி தொகையான ரூ.30.30 லட்சத்தை கட்ட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தனுஷ் பணத்தை செலுத்தி விட்டதாக வணிகவரித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய்யும் தனது சொகுசுக் காருக்கான நுழைவு வரியை நேற்று செலுத்தியுள்ளார். இதனால் இவர்களின் சொகுசு கார் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: சியான் 60 - முக்கிய அப்டேட்!