'அசுரன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் #D40 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். அதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ முக்கித்தோற்றத்தில் நடிக்கிறார்.
#D40 என்னும் தற்காலிக பெயரில் உருவாகி வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி #D40 படத்திற்கு 'ஜகமே தந்திரம்' என பெயரிட்டுள்ளனர். இதில் தனுஷ் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. மே 1ஆம் தேதி இப்படம் வெளியாகும் என மோஷன் போஸ்டரில் அறிவித்துள்ளனர். ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.'ஜகமே தந்திரம்' தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
-
#D40 motion poster https://t.co/t9eUGyUyLq a @karthiksubbaraj padam @Music_Santhosh musical @sash041075
— Dhanush (@dhanushkraja) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#D40 motion poster https://t.co/t9eUGyUyLq a @karthiksubbaraj padam @Music_Santhosh musical @sash041075
— Dhanush (@dhanushkraja) February 19, 2020#D40 motion poster https://t.co/t9eUGyUyLq a @karthiksubbaraj padam @Music_Santhosh musical @sash041075
— Dhanush (@dhanushkraja) February 19, 2020
மோஷன் போஸ்டர் கடைசியில் உலகப் புகழ் பெற்ற ஓவியர் 'லியோனார்டோ டாவின்சி' வரைந்த 'லாஸ்ட் சப்பர்' ஓவியம் போன்று படத்தில் நடித்த கதாபாத்திரங்களை வைத்து காட்சி அமைத்துள்ளனர். இதில் அனைவரும் மது அருந்துவது போன்று உள்ளது. இது சர்ச்சையாகுமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
போஸ்டர் வெளியான சில நிமடங்களிலேயே '#jagamethanthiram' என்ற ஹேஷ் டேக்கை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிங்க: கார்த்திக் சுப்பராஜ்- தனுஷ் கூட்டணி படத்திற்கான பெயர் இதுதான்!