சென்னை : இயக்குநர் நெல்சன் தற்போது விஜயை வைத்து ’பீஸ்ட்’ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடவுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஜயின் குரலுக்கு தன்னுடைய குரல் பொருந்த வேண்டும் என்பதற்காக, இதுவரை இல்லாத வகையில் தன்னுடைய குரலின் மாடுலேஷனை மாற்றி பாட இருக்கிறாராம் தனுஷ்.
இதற்காக தனுஷ் தனியாக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 'பீஸ்ட்' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நவரச நாயகனின் “தீ இவன்” படப்பிடிப்பு நிறைவு!