தீபாவளி திருநாளையொட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் பல்வேறு நாடுகளில் இன்று (நவ. 4) வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
'அட்டகாசம் காட்டும் அண்ணாத்த'
தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில், அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு பட்டாசு வெடித்தும். மேளம் அடித்தும் உற்சாகமாக படத்தை பார்த்து வருகின்றனர்.
முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் நடிகை குஷ்பு சென்னை காசி திரையரங்கிலும், நடிகர் தனுஷ் குடும்பத்துடன் ரோகிணி திரையரங்கிலும் படத்தை பார்த்து ரசித்தனர்.
இதையும் படிங்க: 'அண்ணாத்த' தீபாவளி - தலைவர் தரிசனத்தை மேளதாளத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்!