ETV Bharat / sitara

பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்றம்! - 5ஜி சேவைக்கு தடை கோரி மனு

டெல்லி: 5ஜி தொழில் நுட்பத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என, நடிகை ஜுஹி சாவ்லா தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவருக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 4, 2021, 8:57 PM IST

இந்தியாவில் தற்போது 4ஜி சேவை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 5ஜி சேவையை உலகம் முழுவதும் அறிமுகமாகவுள்ளது. இந்தியாவில் இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இதை செயல்படுத்த ஜியோ, ஏர்டெல் போன்ற சீனா அல்லாத வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து சோதனை செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

5ஜி சேவைக்குத் தடை கோரி மனு

இந்நிலையில், 5ஜி சேவைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகை ஜுஹி சாவ்லா, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நடிகை ஜுஹி சாவ்லா தாக்கல் செய்திருந்த மனுவில், ’நாங்கள் புதிய தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. புதுப்புது தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

செல்போன் டவர்களிலிருந்து வெளியிடப்படும் ரேடியோ கதிர்கள், மனிதர்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். அதனால் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 5ஜி தொழில் நுட்பத்திற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இதனால் எந்தவித ஆபத்தும் இல்லை என சான்றளிக்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

நடிகை ஜுஹி சாவ்லாவிற்கு அபராதம்

இந்த மனு நீதிபதி ஜே.ஆர்.மிதா முன்பு இன்று (ஜூன்.4) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விளம்பரத்துக்காகத் தொடரப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சந்தேகங்களை அரசிடம் அணுகி, அதில் உரிய பதில் கிடைக்காதபட்சத்தில் நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும். சட்டத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்து தவறாகப் பயன்படுத்தியதுடன், நீதிமன்றத்தின் நேரத்தையும் நடிகை உள்பட மனுதாரர்கள் வீணடித்துள்ளனர் எனக்கூறியதோடு, நடிகை ஜுஹி சாவ்லாவிற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அப்போது இந்த தீர்ப்புக்குத் தடை விதிக்குமாறு, நடிகை தரப்பு வழக்குரைஞர் சார்பில் கோரப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: வெப் தொடரில் ஓவியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.