ஹைதராபாத் : பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோன் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள ’கெஹாரியான்’ திரைப்படத்திற்கான பிரமோஷனிற்காக பிக் பாஸ் 15 பைனல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்காக அலெக்சாண்டரிடம் சுமார் ரூ.1லட்சம் மதிப்பிலான ஆடையை தீபிகா படுகோன் ஆர்டர் செய்துள்ளார்.
இன்று (ஜன.30) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பிக் பாஸ் 15 பைனலில் கலந்து கொண்ட புகைப்படத்தை தீபிகா படுகோன் வெளியிட்டார்.
தீபிகாவை அலங்காரம் செய்தவர் சலீனா நட்டானி ஆவார். தீபிகாவின் ஆடையை வடிவமைத்தவர் பிரென்சு ஆடை வடிவமைப்பாளர் அலெக்சண்ட்ரே ஆவார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சியில் இன்று(ஜன.30) ஒளிபரப்பாகும்.
இதையும் படிங்க:விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' ரிலீஸ் தேதி அறிவிப்பு!