ETV Bharat / sitara

ஜீ 5 ஓடிடியில் முதல் நீ முடிவும் நீ வெளியீடு!

author img

By

Published : Jan 21, 2022, 4:56 PM IST

தர்புகா சிவா இயக்கியுள்ள 'முதல் நீ முடிவும் நீ' திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் இன்று (ஜன.21) வெளியானது.

ஜீ 5 ஓடிடியில் வெளியானது முதல் நீ முடிவும் நீ!

கிடாரி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்கு இசையமைத்த தர்புகா சிவா முதல்முறையாக இயக்கியுள்ள படம் முதல் நீ முடிவும் நீ. இத்திரைப்படமானது நமது பள்ளிப்பருவ நாள்களை மீள் பதிவுகளாக கண்முன் காட்டும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கிஷன் தாஸ், ஷரன், அமிருதா, மீதா, சச்சின், ராகுல் கண்ணன், வருண், ஹரீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் நடித்துள்ள அனைவருமே புதுமுகங்கள் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தர்புகா சிவாவின் இசை படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது.

முதல் நீ முடிவும் நீ
முதல் நீ முடிவும் நீ

இந்நிலையில் ’முதல் நீ முடிவும் நீ’ திரைப்படம் இன்று (ஜன.21) ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜீ 5 தளத்தில் வெளியான வினோதய சித்தம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'தாய்க்கு மணிமண்டபம்' கட்டிய திரைப்பட தயாரிப்பாளருக்கு குவியும் பாராட்டு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.