ஹாலிவுட் சினிமாவில், மிக உயரிய ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. இவ்விழா ஆண்டுதோறும், பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அதில் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 93வது ஆஸ்கர் விழா பிப்ரவரி மாதத்துக்குப் பதிலாக மே அல்லது ஜுன் மாதத்துக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளனராம். கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நாடுகளில் திரைப்படங்கள் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால், சில வாரங்களாக பல திரைப்படங்கள் வெளியாகாமல் உள்ளது. கரோனா தாக்கம் குறைந்து மீண்டும் திரைப்படங்கள் அனைத்தும் வெளியான பிறகு, அவை ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்படும் படங்களும் 2021ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கு தகுதிபெறும் என்று அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்னடா இது ஆஸ்கருக்கு வந்த சோதனை...